சிங்கப்பூரில் வேகமாக பரவும் கோவிட் தொற்று- பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
சிங்கப்பூரில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதாகவும், மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகானில் பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுதும் பரவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.
மேலும் தற்போது கொரோனா தாக்கம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
Post a Comment