ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கும் தீவிர முயற்சியில் மகிந்த ஆதரவாளர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் தேர்தலில் பூரண ஆதரவை வழங்க குழுவொன்று தீர்மானித்துள்ளது.
அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அந்த உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை நிமல் லான்சா முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment