மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைகால வியாபாரம்-

 



2 கோடிக்கு மேல் நகரசபைக்கு வருமானம்?


நாத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகாலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்கால பண்டிகைகால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.


மன்னார் நகர சபையினால் கேள்வி கோரலின் அடிப்படையில் சுமார் 300க்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 20 ஆம் தகதி முதல் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்றும்.


-தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.


-மழை மற்றும் பொருளாதார நெருக்கடி மத்தியிலும் மக்கள் பண்டிகை கால பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.


கடந்த காலங்களை விட இம்முறை அதிகமான,  விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.


இதே வேளை இம்முறை மன்னார் நகர சபைக்கு பண்டிகைகால வியாபார  நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் இரண்டு கோடியே இருபது இலட்சம் வருமானம் கிடைத்துள்ளது.


குறித்த நிதியானது 2023 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு  செலவிடப்படவுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.