பிரவுன் சீனியின் விலை அதிகரிப்பு
வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நேற்று (09) சந்தையில் ஒரு கிலோகிராம் பிரவுன் சீனியின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் மாத்திரமே பிரவுன் சீனி உற்பத்தி செய்யப்படுவதாகவும், நேற்று (09) நடைபெற்ற டெண்டரின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் சீனி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ பிரவுன் சுகர் 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்த சீனிக்கு 50 ரூபாய் மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இதன்படி, பிரவுன் சீனியின் விலையை விட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை சுமார் 150 ரூபா குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment