கலால் வரியை உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.



இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் விஷேட மதுபானத்திற்கும் 6,000 ரூபா வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் வெளிநாட்டு மதுபானத்தின் மீதும் 6,600 ரூபாவாக இருந்த வரி 7,320 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

வற் வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன், சிகரெட்டின் விலையும் இன்று முதல் 3 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிகரட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.