நாடாளுமன்றத்தின் முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழியத் தீர்மானம்

 10 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு (Colombo)- பிளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இரண்டு முறை நிதிக் குழுத் தலைவராக இருந்த ஹர்ஷ டி சில்வாவை (Harsha de Silva) அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்

இதற்கான பிரேரணை இன்று(3) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இதேவேளை, நேற்றைய கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அநுராத ஜயரத்னவை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.