அசோக ரன்வலவின் எம்.பி பதவியும் பறிபோகும் வாய்ப்பு!

 முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார்.

தனது கலாநிதி பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அசோக ரன்வலவுக்கு இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தனது கல்வி தகமையை வெளிப்படுத்த நேரம் வழங்குமாறு அசோக ரன்வல கோரியுள்ளார்.

அதற்கமைய, அவருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தனது சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை என்றால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் எனவும் கூறினார். முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டப்பின்படிப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.