கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி விண்ணப்பதாரிகளில் இருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சகல தகவல்களும் http://www.dtet.gov.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அத்துடன் விண்ணப்பப்படிவங்களை mis.dtet.gov.lk இவ்விணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய முறை

பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை இணைய முறையில் விண்ணப்பிக்க முடியாவிட்டால் இவ்வறிவித்தலில் காணப்படும் ''மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு"" அமைவாக A4 அளவிலான தாளில் உரிய விண்ணப்பத்தை தயாரித்து, சரியான முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2024.12.15 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர், உரிய தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அல்லது உரிய கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வந்து ஒப்படைக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு - விண்ணப்ப படிவம் - https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application

                                            -  பாடநெறிகள் - http://dtet.gov.lk/en/course-details/


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.