இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகளுக்கு தடை விதித்த அமெரிக்கா

 கணிசமான ஊழலில் ஈடுபட்டமைக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன, அதிக விலைக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் மோசடித் திட்டத்தை முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள்

இந்தநிலையில், பிரிவு 7031(c) இன்கீழ், குறித்த இருவர் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்கள், அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம்  தெரிவித்துள்ளது.

கபில சந்திரசேன கணிசமான ஊழலில் ஈடுபட்டதாக, இராஜாங்கத் திணைக்களம் பகிரங்கமாகப் பெயரிடுகிறது. இலங்கைக்கு எயார்பஸ் விமானங்களை சந்தை விலைக்கு மேல் கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த போது சந்திரசேன லஞ்சம் பெற்றார்.

அதேநேரம்,  ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்கவை இராஜாங்க திணைக்களம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது.

வீரதுங்க, இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்வதை உள்ளடக்கிய ஊழல் திட்டத்தினால் திட்டமிடப்பட்டு தனிப்பட்ட முறையில் பயனடைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.